ஆயக்குடி பகுதியில் உள்ள தோட்டங்களில் மண் அள்ளுவதற்காக வரும் டிப்பர் லாரிகள் அப்பகுதியில் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் சாலை சேதமடைவதுடன், அசுர வேகத்தில் செல்லும் லாரிகளால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிவேகமாக லாரிகளை ஓட்டிச்செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.