பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் பாதியளவு மண் பரவி குவியல் குவியலாக கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் பரவி கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.