வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆச்சாரியாபுரம் மூகாம்பிகை நகர் 3-வது குறுக்கு தெருவில் சாலை போடாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய அன்றாட வேலைகளுக்கு சென்று வர மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் முறையாக அமைக்காமல் ஒவ்வொரு வீட்டிலும் வெளியில் சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?