கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையத்தில் முக்கிய பகுதி ரவுண்டா ஆகும். இந்த ரவுண்டானா கரூர், வேலூர், நொய்யல், டி.என்.பி.எல். சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்ல 3 ரவுண்டானா அமைக்கப்பட்டது. இதில் 2 ரவுண்டானா மிகவும் சிதிலமடைந்து இருந்தது. இதை சரி செய்ய வேண்டுமென தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த ரவுண்டானாவை சரி செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.