புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஏராளமான மண் குவியல்கள் கிடைக்கிறது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் சாலையை கடக்க முயலும்போது சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த மண்ணில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் குவிந்து கிடக்கும் மண்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.