அளுக்குளி கோபிபாளையம் கிராமம் அருகே அம்மன் நகரில் உள்ள சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் அருகே செல்லும் பாசன வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது மண் சாலையிலும் தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக சேறும் சகதியுமாக மாறுவதால் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. மண் சாலையை தார்சாலையாக அல்லது சிமெண்டு சாலையாக அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.