தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை கிராமத்தில் நெல்லை ரோடு அருகில் உள்ள குருக்கள்பட்டி சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு மழைக்காலத்தில் குளம்போன்று தண்ணீர் தேங்குகிறது. எனவே சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.