புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி பஸ் நிறுத்தம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஆங்காங்கே சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக மதிய நேரத்தில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு, நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.