வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்

Update: 2025-05-04 11:44 GMT

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் இருந்து அரும்பாவூர் செல்லும் 8 கிலோ மீட்டர் தூரத்தில் 12 வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடைகளில் பெரும்பாலான இடங்களில் வேகத்தடை உள்ளதற்கான அடையாள வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்