அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தின் கரும்பாகுளத்திற்கு கிழக்கில் செல்லும் மெட்டல் சாலை ஜல்லிகள் பெயர்ந்து அப்பகுதி மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், முந்திரி விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.