சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2025-04-27 17:46 GMT

ரிஷிவந்தியம் அடுத்த மரூர் ஊராட்சியில் உள்ள திருக்கோவிலூர்-சங்கராபுரம் செல்லும் சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்