திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோமாகுடியில் இருந்து திண்ணியம் பிரிவு சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி விடுவதால் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த சாலை வழியாகவே இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.