திருச்சி கிழக்கு மாவட்டம் மீன் மார்க்கெட், கிருஷ்ணாபுரம் ரோடு, வாழைக்காய் மண்டி தார் சாலை அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் சாலையில் கொட்டப்பட்டது. ஆனால் இதுவரை தார்சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.