குண்டும் குழியுமான சாலை

Update: 2025-04-27 14:37 GMT

சென்னை பெசன்ட் நகர் 1-வது அவென்யூ பகுதியில் ஏராளாமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இங்குதான் சாஸ்திரி நகர் போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது. இந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்