ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்குத் தெரு மற்றும் புதிய அண்ணா நகர் பகுதியை இணைக்க கூடிய தார்ச்சாலை கரடு முரடாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். மேலும் இதனால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நடக்கின்றன. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் புதிய சாலை அமைத்து தருவார்களா?