நாங்குநேரி அருகே காடன்குளம் - பாப்பான்குளம் செல்லும் வழியில் கருமேனியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது. தற்போது அந்த பாலத்தின் மையப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள பள்ளத்தை சீரமைத்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.