திருப்பூர் கரைத்தோட்டத்தில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் மங்கலம் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இப்பகுதி வழியாகத்தான் பல்வேறு இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு சென்று வருகின்றனர். சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை மூடி அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டது. அதனை சரி செய்யாமல் அதன்மேல் இரும்பு தடுப்பு வைத்துள்ளனர். அது வளைவுப்பகுதி என்பதால் வாகனங்கள் திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் விபத்துகளும் நடக்கிறது. எனவே பள்ளத்தை மூடி இரும்பு தடுப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபிமன்யு,திருப்பூர்.