கூடலூர் 2-ம் மைல் பகுதியில் இருந்து வேடன்வயல் பகுதிக்கு செல்லும் சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அங்கு அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை கூட விரைவாக ஓட்டி செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.