சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2025-04-20 12:04 GMT

ஊட்டி நகரில் காபி ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்