வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-04-20 09:50 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு.ஆடுதுறை பகுதியில் ஏராளான ஏக்கரில் வயல் வெளிகள் உள்ளது. இந்த வயல்களில் விவசாய பயன்பாட்டிற்கு டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு வயல்களில் வேலை முடிந்தவுடன் டிராக்டர்கள் அப்படியே சாலையில் உள்ளது. இதனால் டிராக்டர்களில் சிக்கிய உள்ள சகதிகள் மற்றும் மண்கள் அனைத்தும் சாலைகளில் ஆங்காங்கே விழுந்து விடுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்