கடலூர் கூத்தப்பாக்கம்- திருவந்திபுரம் செல்லும் சாலையில் அதிகளவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையிலேயே படுத்து கிடப்பதால் இரவில் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்.