பண்ருட்டி அருகே பெத்தாங்குப்பத்தில் புதிய சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் விபத்து நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.