கடலூர் அருகே புருகீஸ்பேட்டையில் உள்ள சாலையில் நடுவே பெரிய அளவில் பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் இரவு வேளைகளில் அவ்வழியாக வரும் வாகனஓட்டிகள் அந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
