திண்டிவனத்தில் செஞ்சி- சந்தைமேடு சாலையை விரிவாக்கம் செய்யும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே உயிரிழப்புகள் ஏதும் நடைபெறும் முன் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.