இடையக்கோட்டை-ஒட்டன்சத்திரம் சாலையில் மருநூத்துப்பட்டியில் இருந்து கோதையறம்பு வரை 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சில வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் உள்ளது. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடையின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.