திரு்சசி மாவட்டம், புள்ளம்பாடியில் இருந்து செம்பரை கோமாக்குடிக்கு இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில் இந்த சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விடுபட்டுள்ள சாலையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.