புதுச்சேரி நகரின் முக்கிய வீதியான புஸ்சி வீதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் சின்ன மணிக்கூண்டு மீன்மார்க்கெட் அருகே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்