ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராம மாட வீதிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஒரே மாதத்தில் அந்த சாலை சேதமடைந்து தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தரமற்ற அந்த சாலையை அகற்றிவிட்டு மீண்டும் புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.