கடலூர் அடுத்த எஸ்.புதூர் ஊருக்குள் செல்லும் சாலையில் அதிகளவு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடையில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கு தேவையின்றி உள்ள வேகத்தடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?