ஈரோடு மாவட்டம் காரணாம் பாளையம் காவிரி ஆற்று தடுப்பணையிலிருந்து புகழூர் வாய்க்காலுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த வாய்க்கால் கரை ஓரத்தில் நெடுகிலும் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தற்போது சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.