வீரவநல்லூரில் இருந்து புதூர் செல்லும் சாலை சேதமடைந்ததால் அதனை சீரமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி போட்டனர். பின்னர் சாலை அமைக்கும் பணிகளை தொடங்காமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.