கூடலூர் அருகே செம்பாலா பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்தால் அந்த சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரிவது இல்லை. அத்துடன் இரவில் தண்ணீர் தேங்காத நேரத்தில் கூட குழிகள் தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
