திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சேனப்பநல்லூரில் இருந்து நாகமநாயக்கன்பட்டி செல்லும் சாலை குறுகளாக உள்ளதால் ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் சாலையை கடக்க முயலும் போது, சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் சாலையோரத்தில் சுற்றுச்சுவர் இல்லாத கிணறுகளும் உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குறுகிய சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.