பிரம்மதேசம் அருகே முருக்கேரி-காயல்மேடு சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.