சிதம்பரத்தில் உள்ள புதுத்தெரு, வாகிச நகர், தில்லை நகர், காசி மட தெரு, வடக்கு மெயின் ரோடு, கமலீஸ்வரன் கோவில் தெரு உள்பட பல்வேறு தெருக்களில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. பணி முடிந்ததும் அந்த பள்ளங்களை சரியாக மூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பள்ளங்களை மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.