பழனி நகராட்சி 22-வது வார்டு பெரிய பள்ளிவாசல் அருகே சாலையோரம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையோர பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.