ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் முத்துநாய்க்கன்பட்டி பிரிவு சாலை உள்ளது. இந்த இடத்தின் அருகே சுமார் 4 வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.