குண்டும், குழியுமான சாலை

Update: 2025-03-30 15:04 GMT

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியணை ஊராட்சி ஓந்தாம்பட்டியில் இருந்து மாணிக்கபுரம் செல்லும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையின் வழியாக மஞ்சநாயக்கன்பட்டி, காணியாளன்பட்டி, ராசாங்கோவிலூர், ஸ்ரீரங்கபட்டினம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கரூர் நகருக்கு வருவதற்கும் இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்