திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை ரெயில் நிலைய மேம்பால பணி முடிவடையாமல் உள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல ரெயில்வே நிர்வாகம் தற்காலிக சாலை அமைத்துள்ளது. தற்போது அந்த பாதை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையின் இருபுறமும் செடி கொடிகளாக இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகத்தினர் இந்த சாலையை சரி செய்ய வேண்டும்.