வெளிச்சமின்மையால் விபத்து அபாயம்

Update: 2025-03-23 17:32 GMT

தாரமங்கலத்தில் இருந்து நங்கவள்ளி செல்லும் வழியில் தேங்காய் கொட்டாய் பஸ் நிறுத்தம் அருகே பூமிரெட்டிபட்டி உள்ளது. இந்த சாலையையொட்டி உள்ள பிரிவு சாலையானது சின்ன சோரகை கிராமத்திற்கு செல்லும் வழியாகும். இந்த பிரிவு பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இங்கு மின்விளக்குகள் பொருத்தி, பிரிவு சாலை உள்ளது என அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-சசிகுமார், தாரமங்கலம். 

மேலும் செய்திகள்