திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. மேலும் சீரமைப்பு பணிக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளமும் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.