மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் சுந்தர்ராஜபுரம் பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் முற்றிலுமாக சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கரடு, முரடாக உள்ளது. மழை காலங்களில் சாலை முழுவதும் சகதி காடாக காட்சியளிக்கிறது. இதனால் அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையிலும் தற்போது வரை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இச்சாலைகளை முற்றிலுமாக சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும்.