புதுக்கோட்டை மாநகரில் டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து மேட்டுப்பட்டிக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை சீரமைப்பு செய்த ஒரு சில இடங்களில் சாலையில் பள்ளம் போன்று காணப்படுகிறது. மேலும் இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்ல தொடங்கியுள்ளதால் சாலையில் ஒரு சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.