புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் முத்தானப் பட்டி கிராமத்தில் இருந்து கல்லுமடை வரை செல்லும் தார்சாலை மிக மோசமாக உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள அந்த சாலையால் பள்ளி மாணவ - மாணவிகள், முதியோர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே போக்குவரத்துக்கு லாயக்கற்ற அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.