தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-03-23 09:49 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம், மதியநல்லூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளியின் எதிரே வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சாலை பாதுகாப்பு எச்சரிக்கை சின்னங்கள் எதுவும் வைக்கப்படாததால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடை அருகே எச்சரிக்கை பலகை வைத்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்