நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வாகனங்கள் மேட்டுத்தெரு வழியாக சென்று சேந்தமங்கலம் சாலையை அடைகின்றன. இந்த சாலையை சந்திக்கும் இடத்தில் அபாயகரமான குழி ஒன்று உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் இந்த குழியில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த குழியை மண் போட்டு நிரப்பி, சாலையை சீரமைக்க வேண்டும்.