திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம், சாஸ்திரிநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செல்லும் சாலை என்பதால் நகராட்சி அதிகாரிகள் சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.