சேறும், சகதியுமான சாலை

Update: 2025-03-16 09:44 GMT

திருச்சி மாவட்டம் , அந்தநல்லூர் ஒன்றியம், போசம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீரிக்கல் மேட்டில் பள்ளி, பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை தற்போது மண் சாலையாக மாறியுள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக பெண்கள், மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்