வேகத்தடை வேண்டும்

Update: 2025-03-09 17:02 GMT

ஓமலூர் பஸ் நிலையம் அருகே உதவி கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த பகுதிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லவதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த இடத்தில் வேகத்தடை இல்லாத காரணத்தால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. அரசு அலுவலகங்கள் உள்ள பகுதி என்பதால் பெண்கள், முதியோர் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பஸ் நிறுத்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் ஒரு சில பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. எனவே இங்கு வேகத்தடை, அறிவிப்பு பலகை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்