வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-03-09 16:12 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மேப்பூதகுடி ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், விவசாயம் தொடர்பான பொருட்கள் வாங்குவதற்காகவும், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காகவும் விராலிமலைக்கு தான் வரவேண்டிய நிலை உள்ளது . அவ்வாறு அவர்கள் வருவதற்காக பயன்படுத்தப்படும் தார் சாலையானது மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்